யாழில் விசேட சுற்றிவளைப்பு – பலர் கைது!

Monday, October 15th, 2018

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய, 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 7 பேரும், ஏனைய குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த 7 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 16 பேர் உள்ளிட்ட 40 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர, போக்குவரத்து தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மொத்தமாக 152 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில், இடம்பெறுகின்ற வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்றைய தினம் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.
யாழ்ப்பாணம் மானிப்பாய், கோப்பாய் மற்றும் சுன்னாகம் போன்ற காவல்துறை பிரதேசங்களில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக சுமார் 500 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்துக்கு பொறுப்பான காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
விசேடமாக வன்முறையில் ஈடுபடுகின்றவர்களை இலக்குவைத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இந்த சுற்றிவளைப்பு நேற்று மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.

Related posts: