சிறைச்சாலை அதிகாரிகள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் -அமைச்சர் சுவாமிநாதன்!

Monday, October 31st, 2016

சிறைக் கைதிகளின் ஒழுக்கத்தை உறுதி செய்வதற்கு முன்னதாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமானது என சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பயிற்சிகளை முடித்துக் கொண்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்காக நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் –

சிறைக் கைதிகளின் ஒழுக்கத்தை உறுதி செய்வதற்கு முன்னதாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமானது. சிறைக் கைதிகளுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் கடத்தல், கைதிகள் தப்பிச் செல்லல் உள்ளிட்டன தொடர்பில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் சிறைச்சாலை கட்டமைப்பின் நோக்கம் தோற்றுவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

DM-Swaminathan-CI

Related posts:

வடக்கில் புதிய அதிபர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து வடக்ககல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
தொடர் போராட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் –அமைச்சர் வெளியிட்ட தகவல்!
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று - உற்பத்தித் துறையில் இந்தியா வரலாறு படைத்து வருகிறது – சு...