யாழில் மீன்பிடி இறங்குதுறை பயனாளிகளிடம் கையளிப்பு!

Saturday, March 2nd, 2019

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 74.4 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மீன்பிடி இறங்குதுறை வேலைகள் நிறைவு செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த இறங்குதுறைக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இறங்குதுறை மூலம் 140 பயனாளிகள் நன்மையடையவுள்ளதாக தெல்லிப்பழை பிரதேச செயலர் த.சிவசிறி தெரிவித்தார்.

Related posts: