சீனாவுடன் இந்த ஆண்டு ஒப்பந்தமிடப்படும்!

Sunday, February 5th, 2017

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டுக்குள் மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கருனாசேன கொடிதுவக்கு கூறினார்.

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான 65 ஆண்டுக்கும் அதிக கால உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு இதனூடாக முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

சீனாவின் பீஜிங் நகரில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

வரும் மே மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.

சீனாவில் இடம்பெற உள்ள மாநாடொன்றில் கலந்து கொள்வதே பிரதமரின் இந்த விஜயத்தின் நோக்கமாகும் என்று கருனாசேன கொடிதுவக்கு கூறினார்.

அண்மையில் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அது எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு சிலரின் செயற்பாடே என்று கூறினார்.

அதனூடாக சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவில் எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என்று சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கருனாசேன கொடிதுவக்கு கூறினார்.

984441070kODI

Related posts: