மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்க அரசாங்கம் முடிவு!

Monday, January 2nd, 2017

வறுமையில் வாடும் பாடசாலை மாணவ மாணவியருக்கு இலவசமாக காலையில் பாலும் மதியம் உணவும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவ மாணவியருக்கான புதிய காப்புறுதி திட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளது.தனியார், அரச பாடசாலைகள் என பேதம் பாராட்டாது அனைத்து பாடசாலை மாணவ மாணவியருக்கும் மருத்துவ காப்புறுதி வழங்கப்பட உள்ளது.

சுமார் ஒரு இலட்சம் ரூபா வரையிலான காப்புறுதி தொகை வழங்கப்பட உள்ளது.காப்புறுதி வழங்குவதற்காக இந்த ஆண்டில் 2700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வறிய பாடசாலை மாணவர்களுக்கு மாகாண மட்டத்தில் காலணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

வசதிகள் குறைந்த 1500 பாடசாலைகளுக்கு மின்சாரம், நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கல்வி அமைச்சிற்கு 7000 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Sri-Lankan-School-Children

Related posts: