யாழில் நகர்ப் பகுதியில் கால்நடைகளை அவிழ்த்துவிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை!

Sunday, January 6th, 2019

யாழ்.மாநகரப் பிரதேசத்தில் கட்டாக்காலியாக நடமாடும் கால்நடைகளை அடுத்த வாரத்தில் பிடித்து கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கால்நடைகள் போக்குவரத்திற்கு இடையூறாகவும் விபத்துக்களுக்கு காரணமாகவும் அமைகின்றன. யாழ். நகர்ப் பகுதியில் பொதுமக்கள், வர்த்தகர்கள் போன்றோர் சிரமப்பட்டும் வருகின்றனர். ஆகையினால் கால்நடை உரிமையாளர்கள் இவற்றை மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிடுவதை தவிர்த்து கட்டி வளர்க்க வேண்டும். இல்லையேல் மாதாந்த தொழிலாளர்களினால் பிடிக்கப்பட்டு உரிய தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது.

Related posts: