யாழில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்!

Saturday, February 9th, 2019

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை அமுல்ப்படுத்துவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஆறாயிரம் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஸீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயினால் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆனால் கடந்த வருடத்தை விட இவ்வருட ஆரம்பப் பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பிரஸீலா சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: