இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்தும் சீனா ஆதரவளிக்கும் – ஜனாதிபதியிடம் சீனா வெளிவிவகார பிரதி அமைச்சர் உறுதியளிப்பு!
Wednesday, May 31st, 2023
சீனா வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளார்.
இதன்போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்சி முயற்சிகளில் சீனாவின் அசைக்க முடியாத ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் உதவும் வழிகளை சீனா ஆர்வத்துடன் முழுமையாக முன்னெடுக்கும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வவுனியா வளாகத்தில் மருத்துவபீடத்தை உருவாக்குங்கள் - யாழ்.போதனா பிரதி பணிப்பாளர் கோரிக்கை!
கொவிட் தொற்றால் மரணித்த 91%மானோர் எவ்வித தடுப்பூசியையும் பெறாதோர் - தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவி...
ஒரு கோடி 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி - அஞ்சல் மூல வாக்களிப்புக்கான காலம் மேலு...
|
|
|


