யாழில் சிறுமியைக் கடத்த முற்பட்டவர் பொதுமக்களால் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

Wednesday, January 30th, 2019

சிறுமி ஒருவரை கடத்தும் நோக்குடன் நடமாடினார் என்று குற்றம்சாட்டி குடும்பத்தலைவர் ஒருவர் நாவந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு கட்டிவைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இன்று (30) இடம்பெற்றுள்ளது.

குறித்த  நபர் கடந்த வாரம் நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியை கடத்திச் செல்ல முற்பட்டார் என்றும், அதேபோன்று இன்றும் (30) சிறுமியை கடத்தும்  நோக்கோடு அந்தப் பகுதிக்கு வந்தார் என்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்தைப் பகுதியில் நேற்று  முற்பகல் சந்தேகத்துக்கிடமான வகையில் இவர் நடமாடியுள்ளார். நாவாந்துறை சந்தைப் பகுதியில் கூடியிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்து கட்டிவைத்து நையப்புடைத்ததுடன், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் தகவல் வழங்கினார்கள்.

எனினும்,   2 மணிநேரத்துக்கு பின்னரே பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.

சிறுமியை கடத்த முற்பட்டவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சமையல் வேலைக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்த்தாகவும் தெரிவித்தார்.

சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார், அவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Related posts: