யாழில் கோர விபத்து – ரயிலில் மோதுண்ட இளைஞன் மரணம்!

Saturday, February 2nd, 2019

சாவகச்சேரியில் நேற்று ரயிலில் மோதுண்டு படுகாயம் அடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட ரயிலில் மோதி படுகாயமடைந்தார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயிலில் மோதுண்ட இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நுணாவில் பகுதியை சேர்ந்த 28 வயதான பாலமகேந்திரன் விக்னேஸ்வரன் என்ற இளைஞனே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை நீண்ட தூரம் ரயில் இழுத்துச் சென்றுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட இளைஞன் தலை மற்றும் கால் பகுதிகளில் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related posts: