2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு இல்லை!

Saturday, June 2nd, 2018

தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படாது என நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய் கென்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் சிறந்த இலக்கியப் படைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.

இந்த பரிசை அறிவிக்கும் சுவீடர் அக்கடமியின் தேர்வுக்குழு உறுப்பினர் காத்தீரனா பிராஸ் டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் மீது பாலியல் புகார் எழுந்தது.

இதன் காரணமாக இந்த ஆண்டு வழங்கப்படவேண்டிய நோபல் பரிசு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்கான பரிசுடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இலக்கியப் படைப்புகளுக்கான நோபல் பரிசு தேர்வுக்குழுவிலிருந்த உறுப்பினர்கள் பலர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினர்.

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு மட்டுமின்றி 2019 ஆம் ஆண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது கேள்விக் குறியாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய் கென்ஸ்டன் தேர்வுக் குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும்வரை இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்குவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related posts: