யாழில் அஹிம்ஷை தினம்!

Sunday, October 2nd, 2016

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரம் மற்றும் காந்திசேவா அமைப்பு என்பன இணைந்து காந்தி ஜனன தினத்தை கொண்டாடவுள்ளதாக யாழ்ப்பாண இந்திய துணை தூதுவர் ஏ. நடராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான நிகழ்வு சர்வதேச அஹிம்ஷை தினமான இன்று முற்பகல் 9 மணிக்கு யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள துர்கா மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் தமிழக கோயம்புத்தூர் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஸ்ணன், அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் 2007 ஜூன் 15ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், வருடந்தோறும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதியன்று சர்வதேச அஹிம்ஷை தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

www.elakolla.com__2016072317425481908

Related posts: