பிளாஸ்டிக் பொருட்­களை கட­லினுள் வீசும் நாடு­களுள் இலங்­கை முத­லி­டம்!

Thursday, June 9th, 2016

ஆரோக்­கி­ய­மான சமுத்­திரம், ஆரோக்­கி­ய­மான புவி” எனும் தொனிப்­பொ­ருளில் உலக சமுத்­திர தின நிகழ்­வுகள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று கொழும்பில் ஆரம்­ப­மா­கி­யது.

உல­கி­லேயே பொலித்தீன் பாவனை மற்றும் பிளாஸ்டிக் பொருட்­களை கடலில் வீசு­ம் நாடு­களில் இலங்கை முத­லி­டத்தில் உள்­ளது. மேலும் சட்ட விரோத மணல் அகழ்­விலும் இலங்கை முன்­னி­லையில் இருப்­ப­தாக மகா­வலி அதி­கார சபையின் தலைவர் உதய சென­வி­ரட்­ன­வினால் சுட்­டிக்­காட்­டப்­பட்டுள்ளது.

மகா­வலி அதி­கார சபை மற்றும் சுற்­றாடல் அமைச்சின் ஏற்­பாட்டில் உலக சமுத்­திர தின நிகழ்­வுகள் தொடர்­பாக அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று முன்­தினம் நடைபெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரி­விக்கும் போதே அவர் இதனை தெரி­வித்தார்

இது தொடர்­பாக மேலும் கருத்து தெரி­வித்த அவர்

உலகில் முதன் முத­லாக 1992ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் சபை­யினால் சமுத்­தி­ரங்­களை பாது­காக்கும் திட்­ட­மொன்று பிரே­சிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் அறிமுகப் படுத்தப்பட்டது

இதற்­கி­ணங்க இலங்­கையில் 2008ஆம் ஆண்­டி­லி­ருந்து உலக சமுத்­திர தினம் கொண்டாடப்­பட்டு வரு­கின்­றது. வழ­மை­போ­லவே சமுத்­தி­ரங்­களின் பாது­காப்பு மற்றும் சமுத்­தி­ரங்கள் அழி­வ­டை­வதை தடுப்­ப­தற்­கான மாற்று வழி­மு­றைகள் குறித்து மக்­களை தெளி­வு­ப­டுத்தும் நோக்கில் இம்­மு­றையும் சமுத்­திர தினம் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது

கொழும்பு – முகத்துவாரம், காக்கை தீவு கடற்பகுதி மற்றும் வெள்­ள­வத்தை கடற் பகு­திகள் தூய்­மைப்­ப­டுத்­தப்­பட இருப்­ப­துடன் கடற்பகு­தி­களில் கழி­வு­களை வீசு­வதால் ஏற்­படும் விப­ரீ­தங்கள் தொடர்­பிலும் அப்­ப­குதி மக்கள் உள்­ளிட்ட, நிகழ்வில் கலந்துகொள்ளும் பாடசாலை மாண­வர்­க­ளுக்கும் கடற்படை­யி­னரால் தெளிவு படுத்தல் தொடர்­பான செயலமர்வு ஒன்றும் இடம்­பெற உள்­ளது.

அதனை தொடர்ந்து கொழும்பு ஆனந்த குமா­ர­சு­வாமி மாவத்­தை­யி­லி­ருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி சுற்றுச் சூழலை பாது­காப்போம் எனும் பெயரில் நடை­ப­வனி ஒன்றும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது

உல­கி­லேயே பொலித்தீன் பாவனை மற்றும் பிளாஸ்டிக் பொருட்­களை கடலில் வீசும் நாடு­களில் இலங்கை முத­லி­டத்தில் இரு­கின்­றது அது­போல 20 சத விகி­த­மான பொலித்தீன் பாவனை இலங்­கையில் தடை விதிக்­கப்­ப­ட்டி­ருந்­தாலும் தற்­போ­தைய நிலையில் பொலித்தீன் பாவனை சற்று குறை­வ­டைந்து வரு­கின்­றது

இதனை முற்­றிலும் குறைத்து சுற்றுச் சூழலை பாது­காப்­ப­தற்­காக மகா­வலி அதி­கார சபை அமைச்­ச­ர­வைக்கு ஒரு எழுத்து மூல­மான விண்­ணப்பம் ஒன்­றையும் விடுத்­தி­ருக்­கின்­றது

எனவே அது அமைச்­ச­ர­வையில் நிறை­வேற்றப்படு­மாக இருந்தால் நாட்டில் பொலித்தீன் பாவ­னையை முற்­றாக ஒழிக்­கலாம் என நினைக்­கிறேன்

இதற்கு மேல­தி­க­மாக அண்­மையில் நாம் மேற்­கொண்ட ஆய்வு ஒன்றில் இலங்கையின் மத்­திய பகு­தி­களில் இருந்து தான் அதி­க­மான கழி­வுகள் , பிளாஸ்டிக் போத்­தல்கள், பொலித்தீன் போன்­றவை கலக்­கப்­ப­டு­வ­தாக அறிய முடி­கின்­றது.

நாட்டில் இருக்­கின்ற மிக முக்­கிய 105 ஆறு­களில் இருந்தும் சட்ட விரோத மணல் அகழ்வும் நடை­பெ­று­கின்­றது

இது தொடர்பில் இது­வ­ரை பலர் கைது செய்­யப்­பட்டு இருக்­கின்ற நிலையில் தொடர்ச்சியாக சுற்றுச் சூழலை பாது­காக்க மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கார சபை முனைப்பு­களை காட்டும். எனவே கடலிலும் ஆறு­களிலும் குப்­பை­களை கொட்­டு­வதை தவிர்க்­கு­மாறும் இந்த நிகழ்வில் அனை­வ­ரையும் கலந்து கொள்­ளு­மாறும் அழைப்பு விடுக்­கிறேன் என்றார்

Related posts: