யார் என்னதான் தம்பட்டம் அடித்தாலும் எம்மால் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும் – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Sunday, November 14th, 2021

இன்று எதிர்க்கட்சிகள் என்னதான் தம்பட்டம் அடித்தாலும், நாட்டில் முக்கியமான மூன்று நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையிலும் நிதியமைச்சர் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கொவிட் தொற்று மற்றும் தடுப்பூசிகளை வழங்குவதில் மிகவும் வெற்றிகரமான நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்வதாகவும் அமைச்சர் இதன்போது சட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பணக்கார வர்த்தகர்களின் வரிவிதிப்புக்கு எதிர்க்கட்சிகள் ஒப்புதல் அளிக்கவில்லையா என்றும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: