யதார்த்த நிலைக்குட்பட்ட செயற்பாடுகளே மக்களுக்கு நன்மைகளை பெற்றுத்தரும் ஆற்றல் கொண்டது – தோழர் ஜீவன்!

Saturday, November 18th, 2017

யதார்த்த நிலைக்குட்பட்ட செயற்பாடுகளே மக்களுக்கு நன்மைகளை பெற்றுத்தரும் ஆற்றல் கொண்டது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாநகர சபைக்குட்பட்ட வட்டார நிர்வாக மற்றும் உத்தேச வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது

கட்சியின் தலைமை யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் குறித்த கூட்டம் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தூரநோக்கற்றதும் ஜதார்த்த நிலைக்குட்படாததுமான எந்தவொரு செயற்பாடுகளும் எமது மக்களுக்கு ஒருபோதும் நன்மைகளை பெற்றுத்தரப்போவதில்லை. எமது கட்சியினதும் தலைமையினதும் தீர்க்கதரிசனம் மிக்க செயற்பாடுகளே இன்று தமிழ் மக்களுக்கு ஓரளவேனும் நிம்மதியான வழ்வியலை பெற்றுத்தந்துள்ளது. அந்தவகையில் யதார்த்த நிலைக்குட்பட்ட செயற்பாடுகளே மக்களுக்கு நன்மைகளை பெற்றுத்தரும் ஆற்றல் கொண்டது என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

இதன்போது மகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும்  நாம் எதிர்கொள்ளவுள்ள உள்ளூராட்சி தேர்தல் விதிமுறைகள் தொடர்பாகவும் இதன்போது  சிவகுரு பாலகிருஸ்ணனால் குறித்த பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரனும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான விளக்கங்களை கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கு விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாட்டில் ஓகஸ்ட் மாதம்முதல் உக்காத பொலித்தீன் வகைகளை பயன்படுத்த முற்றாகத் தடை - சுற்றாடல் அமைச்சர் மஹ...
ஜனாதிபதியின் உரையை முன்னிட்டு நாடாளுமன்றில் பலத்த பாதுகாப்பு - பார்வையாளர் கூடம் தூதரக அதிகாரிகளுக்க...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சந்திப்பு - முதலீடு, பாத...