மோதலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இரத்து?

Tuesday, December 11th, 2018

நாடாளுமன்றத்தில் மோதலில் ஈடுபட்ட உறுப்பினர்களின் சம்பளத் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நாடாளுமன்றத்தின் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியமை, உறுப்பினர்கள் மீது மிளகாய் தூள் தாக்குதல் நடத்தியமை, சபாநாயகரின் பணிகளை மேற்கொள்ள இடமளிக்காமை, சபாநாயகரின் பாதுகாப்பிற்கு வந்த பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் சம்பளம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியமை நாட்டிலும் சர்வதேசத்திலும் இலங்கை தொடர்பில் விமர்சனம் எழுந்திருந்தது.

Related posts: