மே 9 வன்முறை சம்பவம் – இதுவரை 1348 பேர் கைது – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Saturday, May 21st, 2022

மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக 1,348 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நேற்று (20) 128 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 99 பேர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும், 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,348 ஆகவும், 654 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 638 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், 836 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மாகாண சுகாதார பரிந்துரைகளுக்கு அமையவே நடைமுறைகளை தளர்த்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் – ஜனாதிபதி...
தீவகத்திற்கென தனியான போக்குவரத்து சாலை உருவாக்கப்டபட வேண்டும் – ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உ...
பாடசாலை வாகனத்தின் கட்டணம் அதிகரிப்பு – ஜனவரிமுதல் நடைமுறையில் என பாடசாலை வான் நடத்துநர்கள் சங்கம் அ...