மேலும் 6 மில்லியன் ‘ஸ்புட்னிக் V’ தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அனுமதி!

Tuesday, April 6th, 2021

கொரோனா பரவலை தடுப்பதற்காக 6 மில்லியன் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் உடன்படிக்கை குழுவின் பரிந்துரைக்கமைய 7 மில்லியன் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை, ஒரு தடுப்பூசி 9.95 அமெரிக்க டொலர்கள் வீதம் 69.65 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்காக 2021 மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இந்நிலையில் குறித்த தடுப்பூசியின் அளவுக்கு மேலதிகமாக 6 மில்லியன் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காகவும் சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: