மேலதிக பஸ் மற்றும் ரயில்கள் சேவைகளுக்கு ஏற்பாடு!

Saturday, April 15th, 2017

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தமது ஊர்களுக்கு சென்ற மக்கள் வருவதற்காக மேலதிக பஸ் மற்றும் ரயில்கள் சேவைகள் இடம்பெறும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கும்   மாத்தறை, காலி, யாழ்ப்பாணம், பண்டரவாளை ஆகிய இடங்களுக்கிடையில் இந்த சேவைகள் இடம்பெறவுள்ளன.

கொழும்பு கோட்டை மற்றும் மருதனை ரயில் நிலையங்களிலிருந்து மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடும் என்று ரயில் பொது முகாமையாளர் பி.ஏ.பீ.ஆரியரட்ன தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை எதிர்வரும் 25ம் திகதி வரை ஆயிரத்து 700 பஸ் வண்டிகளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தவுள்ளது. புற மாகாணங்களிலிருந்து கொழும்பு நோக்கி இந்த பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் போக்குவரத்து நடவடிக்கைக்கு பொறுப்பான பிரதி பொதுமுகாமையாளர் ரூபா குணதிலக்க தெரிவித்துள்ளார்.

Related posts: