மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது – தோட்டச் செய்கையாளர்கள் கவலை! .

Wednesday, January 3rd, 2024


………

மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்டச் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், சேனை,சோளவெட்டுவான்,காரவெட்டுவான்,கண்டல் காடு போன்ற கிராமங்களில் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மேட்டு நிலப் பயிர்களான மிளகாய்,மரவெள்ளி ,கத்தரி வெண்டி,கச்சான் உள்ளிட்ட பயிரினங்கள் அழிந்துள்ளதால் நஷ்டமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் பயிர்களை மேற்கொண்டு பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க பல ரூபாக்களை முதலீடு செய்தும் போதிய விளைச்சல் கிடைக்கவில்லை எனவும் வெள்ள நீரினால் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

எனவே இது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய அதிகாரிகள் தங்களுக்கு தேவையான நஷ்ட ஈடுகளை பெற்றுத் தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றன

Related posts: