மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு சீன அரச நிறுவனத்துக்கு உத்தியோகப்பூர்வ அறிவிப்பு – கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்!

Monday, May 31st, 2021

இலங்கையின் மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன அரச நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

துறைமுகநகர வேலைத்திட்டங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இதுதொடர்பாக உத்தியோகப்பூர்வமாக சீனா அரச நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: