முன்கூட்டிய அறிவிப்பின்றி பணிப்புறக்கணிப்பு – அரசாங்க மருத்துவ அதிகாரிகள்!

Saturday, September 30th, 2017

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினைக்கு தீர்வு பெற்று கொடுப்பதில் மேலும் காலம் தாழ்த்தப்பட்டால் முன்கூட்டிய அறிவிப்பின்றி தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹிரித அளுத்கே இதனை தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற மத்திய செயல்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: