முதல்வரின் நிலை மிகவும் கவலைக்கிடமாககிவிட்டது – இலண்டன் மருத்துவர்!
Monday, December 5th, 2016சிகிச்சைக்கு ஜெயலலிதா நன்றாக ஒத்துழைப்பு அளித்த வந்த போதிலும் அவரின் நிலைமை மிகவும்கவலைக்கிடமாக மாறிவிட்டது என ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வந்த லண்டன் மருத்துவர் ரிச்சட் பீல் தெரிவித்துள்ளார்.
“நேற்று ஜெயலலிதா திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்; அவரை அப்போலோ மருத்துவமனையுடன் சேர்ந்து நானும் அவரின் உடல்நிலையை கவனித்து வந்தேன்; அவர் சிகிச்சை தக்க எதிர்வினை தந்தது எனக்கு ஊக்கமளிப்பதாகவே இருந்தது; அவர் நன்றாக முன்னேறி வந்தார்.
ஆனால் நிலைமை மிக மிக மோசமானதாக மாறிவிட்டது. எனினும் முடிந்தவரை அவர் இந்த சிக்கலான சூழலில் இருந்து மீள அனைத்து சிகிச்சைகளும் கொடுக்கப்பட்டது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.
மிக உயர்ந்த நிபுணத்துவம் வாய்ந்த பன்முனை குழுவால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சர்வதேச ரீதியில் கொடுக்கப்படும் அனைத்து உயர்தர சிகிச்சைகளும் அப்போலோவில் இருந்தது என்றும், இ.சி.எம்.ஓ. என்னும், இதயம் மற்றும் நுரையீரல் அவையங்கள் முழுமையாக செயல்படாத நிலையில், வெளியில் செயற்கையான கருவி மூலம் ரத்தத்தை சுத்திகரித்து, ஆக்ஸிஜனை உடலுக்குள் செலுத்துவதற்கான மருத்துவ முறை அவருக்கு அளிக்கப்பட்டது
அதுதான் அதிநவீன சிகிச்சை; உலகின் எந்த ஒரு சிறந்த மருத்துவமனையும் கொடுத்திருக்கக் கூடிய சிகிச்சைதான் அது.
இந்த தொழில்நுட்பம் சென்னை அப்போலோவில் இருப்பது அதன் நவீனத்துவத்தைக் காட்டுகிறது.
உலகித்தில் எந்த ஒரு பகுதிக்கும் நிகராக அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையால், சிறந்த சிகிச்சை ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டது” என்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் ஜெயல லிதாவிற்கு சிகிச்சை அளித்து வந்த ரிச்சர்ட் பீல். மேலும் தமிழக மக்களுக்கு தனது பிரார்த்தனைகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|