டக்ளஸ் தேவானந்தாவால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் யாவும் நிச்சயம் வரலாற்றில் பதிவிடுப்படும் –  வை.தவநாதன்

Monday, October 16th, 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் அனைத்தம் நிச்சயம் வரலாற்றில் பதியப்பட்டதாகவே இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் தெரிவித்துள்ளார்

கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர்களுடனான சந்திப்பின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னைய அரசில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக பங்கெடுத்திருந்த காலப்பகுதியில் நாம் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தபோது பல சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்திருந்தோம்.

கணிசமான அளவு அபிவிருத்திகளை முன்னெடுத்திருந்தாலும் அவை யாவும் டக்ளஸ் தேவானந்தாவின் நேரடி நெறிப்படுத்தலின் கிழேயே முன்னெடுக்கப்பட்டிருந்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கென அறிவியல் நகரில் நிர்மாணிக்கப்பட்ட பொறியியல் பீடத்தையும் விவசாயப் பீடத்தையும் மீண்டும் கிளிநொச்சியில் இயங்க வைப்பதிலும் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சிகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அத்துடன் இந்த கைங்கரியத்துக்காக வேறு எவரும் உரிமைகோரவும் முடியாது.

இவ்வாறாக மக்களுக்கான பணிகளை என்ன இடர்பாடுகள் நெருக்கடிகள் வந்தாலும் கட்சியின் செயலாளர் நாயகத்தின் தலைமை வழிகாட்டல் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுப்பதற்கு நாம் என்றும் தயாராகவே இருக்கின்றோம் என்றும் தவநாதன் இங்கு சுட்டிக்காட்டினார்.

இதன்போது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளர் லிங்கேஸ் ஆகியோர், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ் (கிருபன்) கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts:

பல்கலைகழக வெட்டுப்புள்ளி தொடர்பில் - தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு உட்படுத...
எரிபொருளை எடுத்துச் செல்வதற்காக ரயில்வே துறையின் பங்களிப்பு அதிகரிப்பு - அமைச்சர் உதய கம்மன்பில!
மோட்டார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு – இறக்குமதிக்கான உற்பத்தி வரி 49.1 பி...