மோட்டார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு – இறக்குமதிக்கான உற்பத்தி வரி 49.1 பில்லியன் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவிப்பு!

Monday, March 7th, 2022

இலங்கையில் மோட்டார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாக இறக்குமதிக்கான உற்பத்தி வரி 49.1 பில்லியன் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இந்த வருமான இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ள போதிலும், கடந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 26 ஆயிரத்து 953 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் 22 ஆயிரத்து 779 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அண்மையில் நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் 72 கார்கள், 4 பஸ்கள், 2002 முச்சக்கர வண்டிகள், 1110 மோட்டார் சைக்கிள்கள், லொறிகள் உட்பட 1744 சரக்கு வாகனங்கள், 12877 தரை வாகனங்கள் மற்றும் 9 ஆயிரத்து 144 இரட்டை நோக்க வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: