மீள் சீரமைக்கப்பட்ட வாகனங்களின் விலையும் எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கும் – இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Friday, November 19th, 2021

மீள் சீரமைக்கப்பட்ட வாகனங்களின் விலைகளை எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியாளர்கள் 2022 வரவு – செலவுத் திட்டத்தில் இருந்து உயிர்நாடியை எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அது அவர்களுக்கு சாதகமாக எந்த மதிப்பையும் சேர்க்கவில்லை. கடந்த சில மாதங்களாக வாகனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தமக்கு சாதகமாக எந்தவொரு பெறுமதியையும் சேர்க்கவில்லை. முன்னைய பிரச்சினைகளையே தாங்கள் தொடர்ந்து எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: