மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த தொற்றாளர் எண்ணிக்கை !

Friday, July 30th, 2021

நாட்டில் கடந்த 36 நாட்களுக்குப் பின்னர் இலங்கையில் மீண்டும் ஒரேநாளில் 2000 க்கும் அதிகமானோர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதனடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 329 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது. அவர்களில் 41 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாட்டில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 3 இலட்சத்து 41 ஆயிரத்து 202ஆக உயர்ந்துள்ளது. இதில் 26 ஆயிரத்து 448 பேர் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts: