மீண்டும் இலங்கையின் நிலப்பரப்பை அளவீடு செய்ய நடவடிக்கை!

Tuesday, February 19th, 2019

இலங்கையின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்வதற்கு இலங்கை நிள அளவீட்டுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கைக்கான புதிய வரைபடத்தை அறிமுகப்படுத்துவதற்காக இவ்வாறு புதிய அளவீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, நில அளவைத் திணைக்கள பணிப்பாளர் ஜீ.எம்.ஜீ. உதயகாந்த தெரிவித்துள்ளார்.

கரையோரப் பகுதியிலுள்ள மாற்றங்கள் மற்றும் கொழும்பு நகரின் நகர நிர்மாணத்தினால், நிலப்பரப்பு அதிகரிக்கும் எனவும் நில அளவைத் திணைக்கள பணிப்பாளர் ஜீ.எம்.ஜீ. உதயகாந்த மேலும் கூறியுள்ளார்.

Related posts: