மின் விநியோகம் வழமை நிலையில்!

Tuesday, June 6th, 2017

இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில் துண்டிக்கப்பட்டிருந்த மற்றும் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் வழமை நிலைமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சின் செயலாளர் பிஎம்எஸ் பட்டகொட தெரிவிக்கையில் , அனர்த்தத்தின் காரணமாக 6இலட்சத்து 20ஆயிரம் வீடுகளுக்கு மின்விநியோகம் இல்லாதிருந்தது.

இதில் 6ஆயிரம் தவிர்ந்த அனைத்து வீடுகளுக்கும் தற்பொழுது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மின்மாற்றிகள் நீரில் மூழ்கியமை மற்றும் பாதிக்கப்பட்டிந்தமையினால் பிரதேசங்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: