அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க சதொச நிறுவனம் நடவடிக்கை!

Friday, June 9th, 2023

10 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பாசிப்பயறின் விலை 325 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் பாசிப்பயறின் புதிய விலை 1,225 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

அத்துடன், ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாயின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,290 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

பருப்பு கிலோ ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 299 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், சிவப்பு நாட்டரிசி கிலோ ஒன்றின் விலை 200 ரூபாவாகவும், நெத்தலி கிலோ ஒன்றின் விலை 1,140 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 200 ரூபாவாகவும், சோயா மீட் கிலோ ஒன்றின் விலை 650 ரூபாவாகவும், சிவப்பு அரிசி கிலோ ஒன்றின் விலை 139 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கடலையின் விலை 540 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: