மின் கட்டணமும் அதிகரிக்க வாய்ப்பு!

Saturday, May 12th, 2018

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையினால் மின்கட்டணம் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக  மின்சார சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை அதிகளவில் டீசலை கொண்டே மின்னை உற்பத்தி செய்து வருகின்றமையினால் டீசலின் விலை அதிகரிப்பு காரணமாக மின் கட்டணம் அதிகரிப்பதற்கானவாய்ப்பு உள்ளதாக இலங்கை மின்சார சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் ரன்ஜன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரையில் மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என மின்சாரம் மற்றும் மீள் புத்தாக்கல் வலு அமைச்சு தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Related posts: