காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக்கும் சட்டவரைவை கை விடுங்கள் – தேசிய அமைப்புக்கான ஒன்றியம்!

Thursday, September 21st, 2017

காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக அறிவிக்கும் சட்ட வரைவை நாடாளுமன்ற அமர்விலிருந்து ஒத்திப் போட வேண்டாம். அதனைக் கை விடுங்கள். இவ்வாறு தேசிய அமைப்புக்கான ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இராஜகிரியவில் உள்ள தேசிய அமைப்புக்கான ஒன்றியத்தின் தலைமையகத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அநுராகர தம்மரத்ன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது –

காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக அறிவிக்கும் சட்டவரைவை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதை தவிர்ப்பதாக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்த போதிலும் தலைமை அமைச்சரின் செயற்பாடுகள் எமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. மேற்குலக நாடுகளின் தாளத்துக்கு ஆடுபவராகவே அவரை அன்று தொட்டு இன்றுவரை நாம் அவதானித்து வருகின்றோம்.

இராணுவத்தினர் புலிகளை முறியடிப்பதற்காக நாட்டு மண்ணிலேயே போராடினர். வெற்றியும் கண்டனர். ஆனால் அமெரிக்கப்படையினரோ குவைத் மற்றம் ஈராக் போன்ற நாடுகளில் போர் புரிந்து அங்குள்ள அப்பாவி பொது மக்களை மோசமாக படுகொலை செய்ததுடன் ஈராக்கில் இராணுவ ஒழுக்க விதிமுறைகளை எல்லை மீறி நடந்து கொண்டனர். அதற்காக அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்களா? இல்லையே, அப்படியாயின் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த எமது படையினருக்கு எதிராக மட்டும் ஏன் இந்த சட்டவரைவு? என்றார்.

Related posts: