மின்னணு மண் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பம்!

Monday, January 8th, 2024

மின்னணு மண் (Electronic soil) என்பது விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பமாகும்.

இந்த அணுகுமுறையானது 50 வீதத்திற்கும் மேல் பயிர் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு eSoil எனப்படும் மின்னணு மண்ணின் ஒருங்கிணைப்பை உள்ளடக்கியது.

மண்ணற்ற விவசாய செயற்பாடுகளுக்காக ஆராய்ச்சியாளர்கள் மின்சாரம் கடத்தும் மண்ணை உருவாக்கியுள்ளனர். இந்த நிலைமையானது பார்லி (barley) பயிரின் வளர்ச்சியை 50 வீதம் அதிகரிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் தாவரங்களின் வேர் அமைப்பை மின்சாரம் மூலம் தூண்டுகிறது. இது பயிர் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளுக்கு வழிவகுக்கிறது.

மின்னணு மண்ணின் அறிமுகமானது நிலையான உணவு உற்பத்தியில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்துகிறது. பயிர் விளைச்சலை மேம்படுத்துவதற்கும் உணவு பற்றாக்குறை சவால்களை எதிர்கொள்வதற்கும் நம்பிக்கைக்குரிய தீர்வுகளை வழங்குகிறது.

இந்த நிலையில், குறித்த தொழில்நுட்பமானது உலக நாடுகளிடையே காணப்படும் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கு சாதகமான சமிக்ஞையை காட்டுமென எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பட்டிருந்த நடைமுறைச் சிக்கல்களுக்கு ஈ.பி.டிபி யின் வன்னி ம...
இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு - அபிவிருத்திக்கான சவுதி நிதியம் பிரதமரிடம் உற...
பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதல்: பள்ளிவாசலில் இருந்த 30 பேர் பலி – 50 க்கும் அதிகமானோர் காயம்!