மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை – மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு!

Thursday, March 21st, 2019

அனைத்து பாவனையாளர்களும் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு மீளவும் கோரியுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 2 ஆவது ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறு தற்போது திருத்தப்பட்டுள்ளதாகவும், எனினும் உயர் அழுத்தத்தில் மின்சாரத்தினை விநியோகிக்க முடியாது எனவும் அதன் அபிவிருத்தி அத்தியட்சகர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேவைக்கு அப்பால் மின் உபகரண பாவனைகளை நிறுத்திக் கொள்ளுமாறும், மின்சாரத்தினை வீண் விரயம் செய்யாதிருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் மின்சார நிலையங்களில் அருகில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் குறித்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: