மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்டவிரோதமானவை – ஈ.பி.டி.பியின் உப்புவெளி பிரதேச உறுப்பினர் பாலகணேசன்!

Tuesday, May 14th, 2019

அரச சுற்றறிக்கையின்படி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் அல்லது அரசாங்கத்தின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்தான் பதிவியிலிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வடக்கு மற்றும் கிழக்கில் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் தெரிவு சுற்று நிருபத்தில் கூறப்பட்டவாறு அமைந்திருக்கவில்லை. அந்தவகையில் இதுவரை அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டங்கள் சட்டவிரோதமானவையாகவே அமைகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உப்புவெளி பிரதேச உறுப்பினர் பாலகணேசன் தெரிவித்தார்.

இன்றையதினம் (14.05.2019) உப்புவெளி பிரதேச சபையில் நடைபெற்ற சபையின் மாதாந்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றும்போது, தமது சுயலாபங்களுக்காக அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பவர்களாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆட்சியில் நேரடியாக பங்கெடுக்காத அதேவேளை ஒரு எதிர்க்கட்சியாகவும் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கவும் இல்லை.
அரசாங்கத்தின் பங்காளிகளில்லை என்று தமிழ் மக்களுக்கு காட்டிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிலும், அரசின் கம்பெரலிய திட்டத்தில் தலையீடு செய்வதிலும் அரசாங்கத்தின் பங்காளர்கள் போலவே செயற்படுகின்றார்கள். கம்பெரலிய திட்டத்தில் இன்று இடம்பெறும் அதிகாரத்துஷ்பிரயோகங்களுக்கும் , மோசடிகளுக்கும் இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பதில் சொல்லவேண்டியிருக்கும் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன் என்றும் பிரதேச சபை உறுப்பினர் பாலகணேசன் தெரிவித்தார்.


பொறிமுறைமை குறித்து அமைச்சர் மங்கள ஜெனீவாவில் விளக்கம்!
அமரர் யேசுதாசன் அமினதாப்பின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
தேவையற்ற போராட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் கடுமையாக செயற்படும் !
மாணவி வித்தியா கொலை:  மாவை எம்.பி யிடம் விசாரணை!
உணவுப் பாதுகாப்பு தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!