மாற்றமடையும் காலநிலை: பிரித்தானியாவில் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

Tuesday, January 21st, 2020

பிரித்தானியாவில் நிலவி வரும் கடும் குளிரான காலநிலை மற்றும் பனிப்புயல் காரணமாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய காலநிலைக்கு அமைய பூஜ்ஜியத்திற்கு கீழே வெப்பநிலை வீழ்ச்சியடையும் நிலையில் பொது மக்களுக்கு அவசர சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆபத்தான காலநிலை -7 பாகையை கடந்தால் மக்களுக்கு மாரடைப்பு மற்றும் பல விதமாக நோய்த் தாக்கங்கள் ஏற்படக் கூடும் என பிரதான சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, 1,000-கதிர் குளிர் காற்றானது, காற்று மாசுபாட்டையும் 10 நாட்கள் மூடுபனி மற்றும் மூடுமேகத்தையும் ஏற்படுத்தும் என காலநிலை அவதான நிலைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாத இறுதிக் காலப்பகுதியிலிருந்து தற்போது வரையில் குளிர் காற்று மற்றும் பனிப்பொழிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பாரிய காற்று மாசு நிலவி வருகிறது.

மேலும் இந்த காலநிலை தொடர்ந்து நீடிக்க வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொது மக்கள் அவதானமாகவும் காலநிலைக்கு ஏற்றவகையில் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts:

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் 1983 முதல் ஆரம்பிக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா! (ஒலிவடிவ ச...
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு - உரிய நடவடிக்கை எடுக்குமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ...
எரிபொருள், மின்சார பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நம்பிக்கை!