மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Thursday, October 7th, 2021

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை நீக்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணருமான ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அது தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடு திறக்கப்பட்டுள்ளமையால் ஏற்படக்கூடிய தொற்று நிலை குறித்து எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னரே கண்டறியப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: