மல்லாகம் துப்பாக்கி சூடு: சம்பவம் தொடர்பில் ஐவர் கைது !

Monday, June 18th, 2018

மல்லாகம் பகுதியில் இரு குழுவினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பெலிஸாரை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

மல்லாகம் பகுதி  தேவாலயம் ஒன்றில் வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக நேரில் கண்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின்போது மல்லாகம் குளமங்கால் பகுதியை சேர்ந்த 28 வயதான பாக்கியராஜா என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதுடன். சம்பவத்தில் காயமடைந்த மற்றும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

IMG-20180617-WA0016-720x430 download (1)

Related posts: