உலகின் தலைசிறந்த 20 விஞ்ஞானிகளில் இரண்டு இலங்கைர்கள் -“Research.com” நடத்திய ஆய்வில் தகவல்!

Tuesday, August 15th, 2023

சீனாவின் உயர்மட்ட நுண்ணுயிரியல் நிபுணர்களின் தரவரிசையின்படி, இரண்டு இலங்கை விஞ்ஞானிகள் 11 மற்றும் 15வது இடங்களை பெற்றுள்ளனர்.

பேராசிரியர் லக்ஷ்மன் சமரநாயக்க 11வது இடத்தையும், பேராசிரியர் மாலிக் பீர்ஸ் 15வது இடத்தைப் பெற்றுள்ளார். “Research.com” நடத்திய ஆய்வின்படி இத்தரவரிசை பெறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பேராசிரியர்களும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களாவர். அவர்களின் நுண்ணுயிரியல் மருத்துவப் பணிகளுக்காக உலகப் புகழ்பெற்றவர்கள்.

மருத்துவ ஆராய்ச்சிக்கான அவர்களின் பங்களிப்புகளுக்காக பேராதனைப் பல்கலைக்கழகத்தால் கௌரவ கலாநிதிப் பட்டங்களை பெற்றுள்ளனர்.

பேராசிரியர் சமரநாயக்க ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாகவும் உள்ளார். அவரது தலைமையின் கீழ் QS உலக பல்கலைக்கழக தரவரிசைகளின்படி 2015 இல் உலகின் முதல் பல் மருத்துவப் பாடசாலையாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றுமொரு சிந்தனை இன்று யாழ் நகரில் தலைநிமிர்ந்து காட்சியளிக்கிறது - ...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக...
ஐ.எம்.எவ் இன் இரண்டாம் கட்ட கடனுதவி அடுத்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் - அமைச்சர் நிமல...