மர்மநபர்களால் விளையாட்டு மைதானம் சேதம் – பொலிஸார் விசாரணை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 25 அணிகளுக்கிடையிலான மென்பந்துச் சுற்று துடுப்பாட்டப் போட்டிகள் குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில், மைதானத்தின் துடுப்பாட்ட மேடை இனந்தெரியாத மர்மநபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாட செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இடம்பெறவிருந்த போட்டிகளை நடத்த முடியாது போயுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த போட்டியானது எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த, சம்பவம் தெடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
மேதினம்: போக்குவரத்து சபையிடம் 5,000 பஸ்கள் கோரிக்கை!
முகக்கவசங்களுக்கான விலைகள் நிர்ணயம் - சுகாதார அமைச்சு!
புதிய அரசியலமைப்புக்காகவே மக்கள் ஜனாதிபதிக்கு அதிகாரம் அளித்துள்ளனர் - மகா சங்கத்தினர் தெரிவிப்பு!
|
|