உற்பத்தி குறைப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து அதிகரித்த கச்சா எண்ணெய் விலை !

Thursday, September 29th, 2016

பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பானது உற்பத்தியை குறைத்து கொள்ள ஒப்புக் கொண்ட தன் பிற்பாடு எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்வை சந்தித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்த செய்திகள் வெளியானதை தொடர்ந்து, பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் ஐந்து சதவிகித அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் போடப்பட்டுள்ள முதல் ஒப்பந்தம் இதுவாகும்.

நவம்பர் மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஒரு நாளைக்கு 7 லட்சம் பீப்பாய்கள் குறைவாக உற்பத்தி செய்ய உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த உற்பத்தி குறைப்பானது கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடையே சமமாக பகிர்ந்து அளிக்கப்படவில்லை. ஈரான் மட்டும் தனது உற்பத்தி அளவை அதிகரித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

crudeoil_2396535f

Related posts:


கல்விச் செயற்பாட்டை மேற்கொள்ளும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - உபவே...
அடுத்த சில மாதங்களில் கொரோனா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை மாற்றம்பெறும் – சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்ப...
பல்பரிணாம அபிவிருத்தியின்போது நகரப் பகுதியில் நீர் வடிகாலமைப்பும் உள்வாங்கப்படும் – நடவடிக்கை எடுக்க...