வாக்குக்காக மீண்டும் சந்தர்ப்பவாதிகளும் சரணாகதி கூட்டமும் ஒன்றிணையத் தொடங்கிவிட்டனர் – நெடுந்திவில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ரங்கன் சுட்டிக்காட்டு!

Sunday, January 8th, 2023

தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக சந்தர்ப்பவாதிகளும் சரணாகதி கூட்டமும் மீண்டும் ஒன்றிணையத் தொடங்கிவிட்டனர் என தெரிவித்துள்ள ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் குறித்த தரப்பினரது வேசங்களையும் எதிர்பார்ப்புகளையும் தமிழ் மக்கள் இனியும் நம்பப்போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தலைமையிலான முக்கியஸ்தர்கள் நெடுந்தீவு பிரதேசத்தின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இன்றையதினம் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும்முக்கியஸ்தர்களுடனான சந்திபொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

ஈழ மக்கள் ஜநாயகக் கட்சியை பொறுத்தளவில் தேர்தல் காலத்தில் மட்டும் மக்களிடம் சென்று மக்களை ஏமாற்றுவது கிடையாது.

அதிகாரங்கள் கிடைத்தபோதும் சரி இல்லாது போதும் சரி மக்களுடன் மக்களாக இருந்து மக்களின் தேவைகளை நிறைவு செய்துகொடுப்பதில் முடியுமானவரை உழைத்துவருகின்றநது.

குறிப்பாக தீவக பகுதியின் மக்கள் நல சேவைகளில் அமைச்சரும் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார் என்பது தீவக மக்கள் ஒவ்வாருவருக்கும் தெரியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் னொருளாதார நிலைமைகள் கொரோனா தொற்றாலும் நாட்டிலேற்பட்ட குழப்பங்களாலும் முடக்கப்பட்டமையால் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தது. ஆனாலும் நாம் முடியுமான சேவைகளை முன்னெடுத்தே வந்திருக்கின்றோம்.

தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறுவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன்.

இந்த காலகட்டத்தில் தேவையற்ற குழப்பங்களையும் மக்கள் நலன்களை தடுத்துவந்தவர்களும் உங்களிடம் வாக்கு கேட்க தயாராகயுள்ளனர். அவர்களது நாடகங்களை நீண்டகாலமாக பார்த்து வந்துள்ளதால் இம்முறை அதற்கு எடுபடப்போவதில்லை என்பதும் என்பதும் உண்மை.

நாம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று 35 வருடங்களாக கூறிவந்திருப்பதுடன் அதையே முன்னிறுத்தி மாநிலத்தில் வாழும் மக்களுக்கான பல்வேறு தேவைகளையும் பிரச்சினைகளையும் பெற்றுக்கொடுத்திருக்கின்றோம்.

இதை இதுவரைகாலமும் ஏற்றுக்கொள்ளாத இதர தமிழ் தரப்பினர் இன்று  ஏற்றுக்கொள்ள தொடங்கியுள்ளதுடன் அந்த வழிமுறைக்கும் வரத் தொடங்கிவிட்டனர்.

அந்தாவகையில் நாம் கூறுகின்ற வழிமுறையே எமது மக்களினதும்  நாட்டுக்கும் நன்மையை ஏற்படுத்தும் என்பதுடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வையும் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விஜயத்தின்போது உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் மருதயினார் ஜெயகாந்தனன் உள்ளிட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்ட ரஜமஹா விகாரை – பிரதமரால் சன்னஸ் பத்திரம் விகாராதிபதியிடம் கையளிப்...
இலங்கை பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துகை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவிகள் வழங்கப்பட...
ஆட்சேபனைகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் - பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!