மரமுந்திரிகை இறக்குமதியை நிறுத்த தீர்மானம்!

Tuesday, July 30th, 2019

நாட்டில் இம்முறை மரமுந்திரிகை அறுவடை அதிகரித்துள்ளதால் மரமுந்திரிகை இறக்குமதியை இடை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மரமுந்திரிகை கூட்டுத்தாபன தலைவர் தர்மஸ்ரீ பண்டார கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

மரமுந்திரிகை இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்படவுள்ளது. மரமுந்திரிகை தொழில் துறையை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக வருடத்திற்கு 20 ஆயிரம் மெட்ரிக் தொன் மரமுந்திரிகைகள் தேவைப்படுகின்றது. நாட்டின் கடந்த சில வருடங்களில் கிடைக்கப்பெற்ற மரமுந்திரிகை அறுவடை 10 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் மெட்ரிக் தொன் ஆகும். இருப்பினும் இந்த அறுவடை இம் முறை 2 மடங்காக அதிகரித்திருப்பதால் மரமுந்திரிகையின் இறக்குமதி நிறுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மரமுந்திரிகை தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும். இந்த உற்பத்தி துறைக்கு தேவையான காலநிலை கடந்த வருடத்தில் சாதமாக நிலவியதால் அறுவடை அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து மரமுந்திரிகை இறக்குமதியை நிறுத்த தீர்மானித்திருக்கின்றோம். அமைச்சர் நவீன் திஸ்ஸநாயக்கவின் வழிகாட்டலுக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சரவை வருடந்தோறும் மரமுந்திரிகை பேதுமானதாக இல்லாவிடில் மரமுந்திரிகை தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மரமுந்திரிகை போதுமானதாக இல்லாத காரணத்தினாலேயே இறக்குமதியில் கவனம் செலுத்தப்பட்டது. மரமுந்திரிகை தொழில் துறையில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்களை இத் தொழில் துறையில் தக்கவைத்துக்கொள்வதற்காக நாம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். இத் தொழில் துறை மூலம் பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.

வருடத்தில் 6 000 மெட்ரிக் தொன் மரமுந்திரிகையினை இறக்குமதி செய்வதற்காக இத் தொழில் துறை சார்ந்தவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கியிருந்தோம். வர்த்தகர்களுக்கு நாம் அனுமதி வழங்கவில்லை. நாட்டுக்கு வருடாந்தம் 20 ஆயிரம் மெட்ரிக் தொன் மரமுந்திரிகை தேவைப்படுகின்றது. ஆனால் கடந்த வருடங்களில் 10 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் மெட்ரிக் தொன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

வருடம் தோறும் படிப்படியாக அதிகரித்து இம்முறை வெற்றிகரமான அறுவடையை பெற முடிந்திருப்பதாக மரமுந்திகை கூட்டுத்தாபன தலைவர் தர்மஸ்ரீ பண்டார கருணாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: