20 ஆவது திருத்ததை விமர்சிப்பதன் மூலம் எதிர்கட்சிகள் தங்கள் தவறுகளை மறைக்க முயல்கின்றன – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, September 20th, 2020

உத்தேச 20 ஆவது திருத்தத்தினை முன்வைத்து கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் எதிர்கட்சிகள் தங்கள் தவறுகளையும் தங்களுக்குள் உள்ள பிளவுகளையும் மறைக்க முயல்கின்றன என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்த்தினை எதிர்ப்பவர்கள் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லலாம் அல்லது நாடாளுமன்ற விவாதத்தின் போது திருத்தங்களை முன்வைக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தத்தின் மூலம் நாடு பலவீனப்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச அரசாங்கம் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தது போன்று 20 ஆவது திருத்தத்தின் நகல்வடிவை வெளியிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த அரசியல் ஸ்திரதன்மை அவசியம் இதன்காரணமாக நாட்டின் நலனை கருத்தில் கொண்டே உத்தேச 20 ஆவது திருத்தம் வெளியிடப்பட்டது எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கீடு - பாசையூர் குடாக்கடலில் 30 அடி உயரத்தில் வெளிச்ச வீடு – ஐந்...
தொல்பொருள் வரலாற்று சின்னங்களாக இலங்கையின் ஏழு சிவாலயங்கள் - அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவிப்ப...
பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வு கிடையாது - பொருளாதார ரீதியான தீர்வே அவசியம் - ஜனாதிபதி ரணில்...