மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பிரஜைக்கு அபராத பணம் வழங்கிய சவுதி!

Tuesday, September 27th, 2016

 

தமது நாட்டில் கொலைக்குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜை ஒருவருக்கு அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வழங்கப்படும் அபராத பணத்தின் ஒரு பகுதியை சவுதி அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை பிரஜைக்கும் தன்னுடைய சக தொழிலாளிக்கும் ஏற்பட்டமுறுகலிலேயே இந்த கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளதாக சவுதியில் உள்ள இலங்கைதூதரகத்தின் அதிகாரியான Faizer Mackeen தெரிவித்துள்ளார்.

குறித்த இலங்கை பிரஜை சீதுவ பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் சக தொழிலளியை பல முறைசந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்ததுடன், மரண தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமாயின் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூபா 2 மில்லியன் அபராத பணம் வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த இலங்கை பிரஜை மது அருந்தியதற்காகவும்,மது சாரம் காய்ச்சியகுற்றத்திற்காகவும் அவருக்கு 60-70 சவுக்கடிகள் வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

download

Related posts: