தொல்லியல் செயலணி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!

Saturday, July 11th, 2020

கிழக்கு தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தெரிவிக்கும் தனிப்பட்ட கருத்துக்களைப் பெரிதுபடுத்த வேண்டாம். அது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிழக்குச் செயலணி உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் சில தினங்களுக்கு முன்னர் வழங்கிய நேர்காணலில், திருக்கோணேஸ்வரம் ஆலயம் இல்லை அங்கிருந்தது கோகண்ண விகாரையே என்று குறிப்பிட்டிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் அந்தச் செயலணியை நியமித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செயலணி உறுப்பினர்களை நான் தான் நியமித்தேன். அதன் தலைவராகப் பாதுகாப்புச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

செயலணி உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை செயலணியின் கருத்தாக ஏற்கவேண்டாம். அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. அந்தக் கருத்துக்களை இன, மத, நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் பெருப்பிக்க வேண்டாம். இதேவேளை, கருத்துக்களை வெளியிடுபவர்களும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கிழக்கின் தொல்லியல் செயலணியில் சிறுபான்மையினர் உள்ளடக்கப்படவில்லை என்ற சர்ச்சைக்கு அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா எடுத்த முயற்சி காரணமாக இருவரை இணைத்தக்கொள்வதற்கும் அதற்கான பரிந்துரைகளை வழங்குமாறும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: