மரக்கறியின் விலை வீழ்ச்சி!
Saturday, March 18th, 2017அதிகளவு மரக்கறிகள் சந்தைக்கு கிடைப்பதனால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறியின் விலை அதிகளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகின்றது.
மரக்கறியின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர். அத்துடன், கரட், லீக்ஸ், கத்தரிக்காய் ஆகிய ஏராளமான மரக்கறிகளின் மொத்த விலை 15 முதல் 30 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக பொருளாதார மத்திய நிலைய முகாமைத்துவம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மரக்கறி கொள்வனவாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அந்த மரக்கறிகள் காட்டு யானைகளின் உணவிற்காக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சங்கானை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை !
திட்டங்களைக் கோப்பு வடிவில் வைத்திருப்பதில் அர்த்தமில்லை - செயற்படுத்துவதே அவசியமானது - ஜனாதிபதி!
நாட்டை மீண்டும் திறப்பதற்கு முன்னர் ஒரு விரிவான அறிக்கை வேண்டும் – ஜனாதிபதி துறைசார் தரப்பினரிடம் வல...
|
|