மன்னார் காணி சர்ச்சைக்கு இரண்டு வாரங்களுக்குள் உரிய தீர்வு – வடக்கு ஆளுநர் உறுதி!

Wednesday, May 12th, 2021

மன்னார் பண்டிவிரிச்சான் கோயில் மோட்டை பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி சர்ச்சைக்கு இரண்டு வாரங்களுக்குள் உரிய தீர்வு வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் உறுதியளித்துள்ளார்.

கோயில் மோட்டை பகுதியில் நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பயிற்செய்கைக்கு ஏற்றவகையில் காணப்படும் 67 ஏக்கர் நிலப்பகுதியை மன்னார் மடு தேவாலயம் கடந்த பல வருடங்களுக்கு மேலாக உரிமை கொண்டாடி வரும் நிலையில் குறித்த காணிப்பகுதியானது அரசாங்கத்திற்கு சொந்தமான என வடமாகாண ஆளுநரினால் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த காணிகளை பயிற்செய்கை மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு பிரித்து வழங்குவது தொடர்பில் மாவட்ட காணி ஆணையாளருடன் கலந்துரையாடி உரிய தீர்வினை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுத்தருவதாக வடமாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளார்

Related posts: