இலங்கை – இந்திய உறவானது பல்லாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்தது – இலங்த்தீவின் 73 ஆவது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மேடி தெரிவிப்பு!

Thursday, February 4th, 2021

இலங்கை – இந்திய உறவானது மொழி, மதம் மற்றும் கலாசாரம் ஆகிய பகிரப்பட்ட பாரம்பரியங்களின் அடிப்படையிலான பல்லாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த உறவாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் சயய்தியிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் – கடந்த வருடம் கொவிட்-19 நோய்க்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் இரு நாடுகளுக்குமிடையில் காணப்பட்ட ஒத்துழைப்பு குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஆண்டுகளிலும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் வலுவாக்கப்பட்டு நமது மக்களின் செழுமை மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டுமென தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்கு மத்தியிலும் அபிவிருத்தி ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள், மக்கள் இடையிலான தொடர்புகள் ஆகியவை கணிசமான முன்னேற்றத்தை அடைவதற்கு வழிசமைத்த இலங்கை மற்றும் இந்திய தலைவர்கள் மட்டத்திலான கிரமமான தொடர்பாடல்களின் தொடர்ச்சியாக இந்த வாழ்த்துச் செய்தியும் அமைந்துள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: