மனித உரிமை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொலிஸாருக்கு நிவாரணம் – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை ஆறு மாத காலத்திற்குள் முடிக்கத் தவறினால் அது இரத்து செய்யப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தங்கள் கடமையைச் செய்ததற்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தகையவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அமைச்சர் சரத் வீரசேகர , பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஆகவே இந்த விடயத்தில் தீர்வை காண அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருடன் இணைந்து ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.
இதேவேளை பொலிஸாரினால் சித்திரவதைகளை அனுபவித்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக குற்றச்சாட்டை எதிர்கொண்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற அமைச்சரின் கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|